வாழ்க்கை என்னும் பாதை
*வாழ்க்கை எனும் பாதை...*
_*வாழ்க்கை பாதை*_
_*எல்லோருக்கும்*_
_*ஒரே மாதிரியானவை அல்ல,*_
_சிலர் மலர்கள் மேல்_
_நடக்க கூடும்._
_*சிலர் முட்கள் மேல்*_
_*நடக்க கூடும் .*_
_சிலர்மலர்களிலும், முட்களிலும்_
_நடக்க கூடும் ._
_*மலர்களில் நடந்த*_
_*போதிலும்*_
_*சில வேளைகளில்*_
_*அவர்களுக்கும்*_
_*கால்கள் வலிக்க*_ _*கூடும்.*_
_*முட்கள் என்றால் ,*_
_*உன் அடுத்த அடியில்*_
_*கவனம் கூடும்.*_
_மலர்களும் ,முட்களும்_
_என்றால் ,_
_எங்கே எப்படி_
_நடக்க வேண்டும்_ _என்ற_
_தெளிவு கூடும்._
_*செல்லும் பாதையில்*_
_*பேச்சு துணைக்கு*_
_*சிலர் வர கூடும் .*_
_*பேசாமலும் சிலரை*_
_*கடக்க கூடும் .*_
_*வழி காட்ட சிலர்*_
_*வர கூடும்.*_
_*தவறான*_ _*வழியை காட்டவும்*_
_*சிலர் வர கூடும்.*_
_விழும் போது தூக்கி விட_
_சிலர் வர கூடும் ._
_விழும் போது_
_சிரிப்பதற்கும்_
_சிலர் வர கூடும்._
_முந்தி நடக்கையில்_
_முதுகுக்கு_ _பின்னால்_
_தட்டி குடுக்க_
_சிலர் வர கூடும் ._
_போக விட்டு_
_புறம் பேச_
_சிலர் வர கூடும்._
_*இளைப்பாறும் மரமாய்*_
_*சிலர் நிழல் குடுக்க கூடும் .*_
_*உன் நிழல் மட்டுமே*_
_*துணை என்ற*_
_*நிலையும் வர*_ _*கூடும்.*_
_*வழி(லி)*_ _*எதுவாயினும் ,*_
_*காணும் மனிதர் யாராயினும்*_
_*பாதை முடியும்*_ _*வரை*_
_*பயணித்தே ஆக வேண்டும் .*_
_இடையில் முடங்கி விடாதே ,_
_இயலாமல் முடித்து விடாதே ._
_முடியும் வரை_ _கால்களை_
_கொண்டு நடந்து_ _விடு_
_முடிந்தால் ஓடி விடு ._
_*முடியாமல்*_ _*முடங்கும்*_
_*போது ,*_ _*தன்னம்பிக்கை யை கொண்டு*_
_*ஒரு அடியேனும் முன்னுக்கு சென்று விடு...*_
Comments
Post a Comment